• June
    25
    Tuesday

Main Area

Main



வாட்டர் பலூன் பஞ்சாயத்து; இளைஞரை கத்தியால் குத்திய 12 வயது சிறுவன்

வாட்டர் பலூன்
வாட்டர் பலூன்
Loading...

வாட்டர் பலூனை தன் மீது எறியக்கூடாது என திட்டிய இளைஞரை 12 வயது சிறுவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஸ்டிர மாநிலம், ஹனுமன் நகர் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவரை 12 வயது சிறுவன் கத்தியால் குத்தியிருக்கிறான். ஹோலி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி வாட்டர் பலூன்களை ரெடி செய்து கொண்டாட்டத்தை துவங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் இளைஞர் ஒருவர், சிறுவனை வாட்டர் பலூன்களை எறியக்கூடாது என சாடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், இளைஞரை வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் கத்தியால் குத்தியிருக்கிறான். சம்பவ இடத்தில் இருந்தவர்கள் இளைஞரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுவனை கைது செய்து பிவந்தி சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பியுள்ளது காவல்துறை. 

2018 TopTamilNews. All rights reserved.